கைது
முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கைது செய்யப்பட்ட அதிகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறுபவர்களைக் கைதுசெய்வது தொடர்பில், பொலிஸாரால்
முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறிய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமை உள்ளிட்ட குற்றங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
இதற்கமைய, கடந்தாண்டு ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 3,755 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment