ரிசாத் பதியுதீன், உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் ; ஆதாரங்கள் உள்ளன.

 ரிசாத் பதியுதீன், உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் ; ஆதாரங்கள் உள்ளன.

 



நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.



உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்து சிஐடியினரும் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே நாடாளுமன்ற உறுப்பினரையும் அவரது சகோதரரையும் கைதுசெய்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் தற்கொலைகுண்டுதாரிகளுடன் தொடர்புகளை பேணியமை குறித்தும் அவர்களிற்கு நிதி கிடைப்பதற்கு உதவியமை குறித்தும் ஆதாரங்கள் உள்ளன

என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



பொலிஸார் இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் கிடைக்கும்போதெல்லாம் விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !