சமையல் எரிவாயு விலை அதிகரிக்கபட மாட்டது.

 சமையல் எரிவாயு விலை அதிகரிக்கபட மாட்டது.

 


சமையல் எரிவாயு விலையினை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும்

 எடுக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்


அத்துடன், சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், நாட்டில் சமையல் எரிவாயு விலையினை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.


இதன்படி, 12 தசம் 5 கிலோகிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையினை குறைந்தபட்சம் 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021