நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்க ஜனாதிபதி கோத்தாவுக்கு அபேராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை.

 நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்க ஜனாதிபதி கோத்தாவுக்கு அபேராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை.

 


நூருல் ஹுதா உமர்  

நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள அரச 

இயந்திரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அபேராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார்.



அபேராம விகாரையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.




மேலும் கருத்து தெரிவித்த அவர், பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளித்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எவ்வித பாதிப்பும் நடக்கப்போவதுமில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அரச சேவையும், அரச இயந்திரமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதியை கேட்கிறேன்.



இது தொடர்பில் ஆலோசனை கேட்க பொருத்தமான பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு கேட்கிறேன். அண்ணனும் தம்பியும் இணைந்து செயற்பட முடியும். அரச சேவையும், அரச இயந்திரமும் வீழ்ச்சியடைந்துள்ளது தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள். 


அமைச்சர்கள் என்னிடம் ஒன்றையும், ஜனாதிபதியிடம் ஒன்றையும் கதைக்கிறார்கள்.



கொள்கைகளற்ற இவ்வாறானவர்கள் தொடர்பில் நான் பேச விரும்பவில்லை. இந்த நாட்டை விற்பனை செய்தாவது அவர்களின் அமைச்சுக்களை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். எனினும் பிரதமர் மஹிந்த அவ்வாறானவர் இல்லை.



நாட்டை கட்டியெழுப்பிய இன்னும் கட்டியெழுப்ப நினைப்பவரே அவர். அவரை நன்கு அறிந்தவன் என்றவகையில் கூறுகிறேன் பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளித்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எவ்வித பாதிப்பும் இறுக்கப்போவதுமில்லை.



நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டப்பாய மஹிந்தவும் இணைந்து ஆலோசித்து செயலாற்ற வேண்டும். என்றார்

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !