நாட்டில் ஏற்பட்ட COVID பரவல் அசாதாரண சூழ்நிலை

 கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விடுக்கும் எச்சரிக்கை.

 



எப்.முபாரக் 

நாட்டில் ஏற்பட்ட COVID பரவல் அசாதாரண சூழ்நிலை

 காரணமாக பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்தவும்.



1. சமய அனுஷ்டானங்களின் போது கலாச்சார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நடைமுறைகளை கட்டாயம் கடைபிடித்தல் வேண்டும்.



2. மே 31 அல்லது மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதை முற்றுமுழுதாக

தவிர்த்தல் வேண்டும்.



3. இப்தார் நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் , களியாட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை முற்றுமுழுதாக தவிர்த்தல் வேண்டும்.


4. வீதியோரக் கடைகள் மற்றும் பண்டிகை கால விசேட கடைகளை சனநெரிசலற்ற இடத்தில் அமைத்தல் அல்லது அவற்றில் இருந்து விலகிக் கொள்ளல் வேண்டும். 


5. தேவையற்றதும் அனாவசியமானதுமான வெளி பயணங்களை முற்றுமுழுதாக தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.


6. வர்த்தக நிலையங்கள் விசேடமாக பண்டிகைக்கால கடைகள் மற்றும் வீடுகளில் வர்த்தகம் செய்வோர் மற்றும் நுகர்வோர் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் நீதிமன்ற அனுமதியுடன் பூட்டப்படும். 


7. வாராந்த சந்தைகள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நுகர்வோர் என அனைவரும் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பேண வேண்டும்.


8. ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிகளை ஏற்றுதல் வேண்டும்.


சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பேணி சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு நாமும் நமது நமது குடும்பமும் சமூகமும் கொவிட் பரவலில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021