குருநாகல் (இப்பாகமுவ) 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி
குருநாகல் (இப்பாகமுவ) 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி
இக்பால் அலி
1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி வழங்கி
வைக்கப்பட்டது.
இப்பாகமுவ சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு உட்பட்ட நேபிலிகும்புர பிரதேசத்திலுள்ள 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்று தடுப்பூசிகளைப்பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குனபால ரட்னசேகர ,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யூ. கே. சுமித் உடுகும்புர , குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினருமான எம். எஸ். எம். பாஹிம் மற்றும் வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பெரு எண்ணிக்கையிலான மக்கள் வரிசையில் நின்று கொரோனா தொஸ்ரீhற்று தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டனர்.
இக்பால் அலி
Comments
Post a Comment