2ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது ‘டோஸ்'

 2ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது ‘டோஸ்'

 




கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப் பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது டோஸ் வழங்கப்படுவது அவசியமென பாராளுமன்ற உறுப்பினரும் வைராலஜி நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.



கொவிட் தடுப்பூசியிலிருந்து ஒருவரை ஒரு வருடம் மாத்திரமே பாதுகாக்க முடியுமென வைத்திய பரிசோதனைகள் தெரி விக்கின்றன.



இந்நிலையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடப்பதற்குள் மூன்றாவது டோஸ் வழங்கப்பட வேண்டும்.


தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர்காலப் போக்கில் உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைகின்றது. மேலும் அதனை மேம்படுத்துவதற்கு மூன்றாவது டோஸ் டோஸ் வழங்கப்பட வேண்டும்.


இதேவேனை ஒரு வைரஸ் உடலி நுழைவதால் இந்தோய் பரவுவதில்லை.


நோயை பரப்புவதற்கு கணிசமான அளவு வைரஸ் உடலில் நுழைய வேண்டும். முகக் கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை கழுவுதல் என்பவற்றின் மூலம் வைரஸ் உடலுக்குள் நுழைவதை தடுக்கலாம்.


வைரஸால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மக்களுக்கு எந்த அறிகுறியினையும் காட்ட வில்லை. ஆனால் அவை வலுவான நோய் காவிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !