கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் நோண்டிய மனைவிக்கு சுமார் 3 லட்சம் ரூபா அபராதம்.

 கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் நோண்டிய மனைவிக்கு சுமார் 3 லட்சம் ரூபா அபராதம்.

 




ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம்

 கொடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்று மனைவி நோண்டி பார்த்தார். அப்போது அதில் பல தகவல்கள் இருந்தன. அவற்றை தனது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அனுப்பி வைத்தார்.



இது சம்பந்தமாக கணவர் தனி மனித உரிமை மீறல் சட்டத்தின் அடிப்படையில் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதி அவரது மனைவிக்கு 5400 திருஹம் ( இலங்கை ரூ.2 லட்சத்து 91 ஆயிரம்) அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


நன்றி : Malai malar

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !