கொரோனா மரணங்கள்... இன்றுவரை 322 அடக்கம் . இன்றைய தினம் மட்டும் 21 உடல்கள் அடக்கம்.
கொரோனா மரணங்கள்... இன்றுவரை 322 அடக்கம் . இன்றைய தினம் மட்டும் 21 உடல்கள் அடக்கம்.
இலங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி
பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் இன்று (29) இருபத்தொரு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனாவால் மரணத்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனாவினால் மரணமடையும் உடல்களை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் இன்று சனிக்கிழமை வரை 322 அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 298, இந்து சடலம் 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 03, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-
Comments
Post a Comment