அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு 48 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மடக்கிப் பிடிப்பு...
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு 48 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மடக்கிப் பிடிப்பு...
நாடு முழுவதும் தற்போது பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள
நிலையில், அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த பேருந்து, இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு (30) பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment