வீடுகளில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! 7 நாட்களில் 59 பேர் வீடுகளில் மரணம் !! Pp
வீடுகளில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! 7 நாட்களில் 59 பேர் வீடுகளில் மரணம் !!
கொரோனா தொற்று காரணமாக வீடுகளிலேயே மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கொவிட் செயலணி சுட்டிக்காட்டி உள்ளது.
கடந்த 20 ம் திகதி முதல் 27 ம் திகதி வரையான காலப்பகுதியில் வீடுகளில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 59 என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 20 ம் திகதி 9 பேர் கொரொனா தொற்றுடன் வீடுகளில் மரணமடைந்துள்ள அதேவேளை 27 ம் திகதி 5 பேர் கொரொனா தொற்றுடன் வீடுகளில் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் அவற்றை மறைக்காமல் வைத்திய உதவியை நாடுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment