வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வெடிமருந்துகள் மீட்பு : இரு இளைஞர்கள் கைது

 வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வெடிமருந்துகள் மீட்பு : இரு இளைஞர்கள் கைது



வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது, திருகோணமலை மாவட்டத்தின் இறக்கக்கண்டி பிரதேசத்தில் நேற்றிரவு (26) 10 மணியளவில் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. 


அத்தோடு, இவ்வெடி மருந்துகளை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 39 மற்றும் 31 வயதுடைய இரு இளைஞர்களும்

கைது செய்யப்பட்டுள்ளனர். 


என்ன நோக்கத்துக்காக எங்கிருந்து இவ்வெடி மருந்துகள் கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பில்

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இந்த நடவடிக்கையின் போது திருகோணமலை மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவும்  இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !