இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையை பாதுகாப்பு செயலாளர் முற்றாக நிராகரித்தார்.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையை பாதுகாப்பு செயலாளர் முற்றாக நிராகரித்தார்.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாக்கப்பட்ட தகவலை
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரத்ன முற்றாக நிராகரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அவசர ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பயண அறிவுறுத்தலில், இலங்கையை 4ஆம் அடுக்கில் வைத்த அமெரிக்கா, இலங்கைக்கு அமெரிக்கர்கள் யாரையும் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
கொவிட் நிலைமை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் அவ்வாறான தாக்குதல் அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்றும் இலங்கை மக்கள் தேவையற்ற பீதிக்கு உள்ளாக வேண்டாம் என்றும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment