பயணம் செய்யும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும்போது பொதுமக்களை சங்கடப்படுத்தும்படியாக நடந்துகொள்ள வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவு.
பயணம் செய்யும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும்போது பொதுமக்களை சங்கடப்படுத்தும்படியாக நடந்துகொள்ள வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவு.
(எம்.எப்.எம்.பஸீர்)
கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பணிகளுக்காக
பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும்போதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை அமுல் செய்யும்போதும் பொதுமக்களை சங்கடப்படுத்தும் படியாக நடந்து கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு பொதுமக்கள் சங்கடப்படும்படியாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடந்து கொள்வது, ஊடகங்களில் வெளியாகியுள்ள பல காணொளிகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக குறித்த நபர்களின் ஆத்ம கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சமூகத்தில் சங்கடப்படும் நிலைமை தோன்றுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்வாறு பொதுமக்களை சங்கடப்படுத்தும்போது அவர்களுக்கு பொலிஸார் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களே ஏற்படும் என தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர், இதன் பிறகு பொது மக்களை சங்கடப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுவது தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளியானால், குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Comments
Post a Comment