தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை: தென்கொரியா

 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை: தென்கொரியா

 



-ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் July மாதத்திலிருந்து முகக் கவசம் அணிய தேவையில்லை

என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு தடவை தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. 



தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தகைய அறிவிப்பை தென்கொரியா வெளியிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  அதேபோல், June மாதத்திலிருந்து ஒரு தடவை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்  கூட்டமாக கூட அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



5 கோடியே 20 லட்சம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட தென்கொரியாவில், வரும் September மாதத்திற்குள் 70% பேருக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும் என தென்கொரியா திட்டம் வகுத்துள்ளது. தற்போது 7.7% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 



70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனிமைப்படுத்தலுக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் தென் கொரியா ஜனாதிபதி கிம் பூ கியும்  தெரிவித்துள்ளார். 



தென் கொரியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடக்கம் முதலே சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அங்கு கடந்த 2015ம் ஆண்டு தான் MERS என்ற தொற்று பரவல் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்திய அனுபவத்தைக் கொண்டு, தென் கொரியா கொரோனா பாதிப்பை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது. முறையான சோதனை, சரியான தனிமைப்படுத்துதல் மூலம் கொரோனா பாதிப்பைத் தென் கொரியா கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !