வெள்ளிக்கிழமை) மாலை ஆறு இளைஞர்கள் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஆறு இளைஞர்கள் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது
செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசிஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்த நடாத்திய சோதனையின் போதே இந்த ஆறு சந்தேக நபர்களும் அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களும கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் இருந்து 890 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் இவர்கள் 21,25,26,28,31,35 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் வாழைச்சேனை , பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை, கேணிநகர் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment