சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் .
சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் .
ஏ.ஏ.எம்.பாயிஸ்--
சீனாவிலோ அல்லது சீனா சார்ந்த தொழில் துறைகளில் இணைவதாயின் சீன மொழி அத்தியாவசியமாகும்
என நீர்வளத் துறைஅமைச்சரும் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் சீனா, சீன மொழி மற்றும் சீனாவின் கலாசாரங்கள் குறித்து கேலிச் சித்திரங்கள் தகவல்கள் பரிமாறப்படுவது குறித்து அவர், நேற்று முன்தினம் (27) கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது சாதாரண விடயமாகும். சீன நாட்டில் அல்லது சீனா சார்ந்தஇடங்களில் தொழில் புரிவதாக இருந்தாலும் சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவித்தஅவர், தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு இது ஒரு மேலதிகத்
தகைமையாகவும் நன்மையாகவும் அமையும் என்றார்.
Comments
Post a Comment