கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அவசியம் – ரணில் விக்கிரமசிங்க
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அவசியம் – ரணில் விக்கிரமசிங்க
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அவசியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் எதிர்கட்சியினரும் இணைந்து விசேட சட்டத்தை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
விசேட சட்டத்திற்கான யோசனைகளை தயாரித்து சமர்ப்பிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த விடயத்தில் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பொதுவான கொள்கைகள் குறித்த நகல்வடிவொன்றை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த நகல்வடிவு குறித்து அரசியல் கட்சிகளுடனும் எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் அரசாங்கம் அவர்களது கருத்துக்களை கோரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து எதிர்கட்சிகளும் தங்கள் யோசனைகளை முன்வைக்கவேண்டும்,மருத்துவ நிபுணர்கள் வர்த்தக சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது அவசியம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒருமாதத்திற்குள் அனைவரும் இணங்ககூடிய நகல்வடிவவை நாட்டினால் உருவாக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ள அவர் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தினை நாடாளுமன்றம் பின்னர் ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகள் இன்னமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் அரசாங்கம் ஏழு மாதங்கள் தாமதமாகவே தடுப்பூசி திட்டம் குறித்து கவனம் செலுத்த தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.இது குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவற்றை விற்பனை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டவர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும்,சில குழுக்கள் தடுப்பூசி விற்பனை மூலம் இலாபம் சம்பாதிப்பதற்கு முயல்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மூலம் இடைத்தரர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் உருவாக்ககூடாது என ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது,இலங்கை 12 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்க தொடங்கினால் இலங்கையின் தடுப்பூசி தேவை அதிகரிக்கும் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கைக்கு 30 முதல 35 மில்லியன் டோஸ் வைரஸ்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ள அவர் மேலதிகமாக தடுப்பூசி உள்ள நாடுகள் கொவக்ஸ் திட்டத்திற்கு அவற்றை வழங்க தீர்மானித்துள்ளன மேலும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிற்கு தடுப்பூசியை வழங்குவதால் கொவாக்ஸ் திட்டத்திற்கான தடுப்பூசியின் அளவு குறைவடையும்,இத்தகைய சூழ்நிலை காரணமாக இலங்கை அனைத்து பிரஜைகளிற்கும் தடுப்பூசியை வழங்குவது அடுத்த வருடமே சாத்தியமாகும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment