இந்தியா C அணி கூட இலங்கை அணியை தோற்கடிக்கும் ; கம்ரான் அக்மால்
இந்தியா C அணி கூட இலங்கை அணியை தோற்கடிக்கும் ; கம்ரான் அக்மால்
இந்தியா இலங்கைக்கு தங்களது சி அணியை அனுப்பினாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலஒயில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் இதனை கூறியுள்ளார்.
“இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி டுவண்டி தொடருக்காக இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. சுற்றுப்பயணத்தின் போது இந்தியா ஐந்து டி 20 போட்டிகளையும், மூன்று ஒருநாள் போட்டிகளையும் விளையாடும். ஆனால் இலங்கைக்கான சுற்றுப்பயண அணி வழக்கமான இந்திய அணியாக இருக்காது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறும் இறுதி ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இப்த இரண்டு இரண்டு தொடர்களுக்கு இடையில், இந்தியாவுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக இடைவெளி இருக்கும்.
இடைவெளியின் போது,இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு டெஸ்ட் அணியில் உள்ள இந்திய வீரர்கள் யாரும் இலங்கை தொடரில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் இன்னும், இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய ஒரு வலுவான துணை அணியைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் பல தொடர்களை விளையாட இந்தியாவின் பெஞ்ச் வலிமை போதுமானது என்பதை இது காட்டுகிறது.
இலங்கை சமீபத்தில் பங்களாதேஷிடம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தோற்றது. இலங்கையின் சமீபத்திய வடிவம் தேசிய அணிக்கு மிகவும் கவலையளிக்கும் காரணியாகும். இந்திய அணி ஒரே நேரத்தில் இரண்டு அணிகள் களமிறங்க உள்ளன. இங்கிலாந்தில் ஒன்று, இலங்கையில் ஒரு அணிகள் விளையாடவுள்ளன.
அவர்களின் கிரிக்கட் குழாம் மிகவும் வலுவானது, ஒரே நேரத்தில் மூன்று சர்வதேச அணிகளைக் கூட களமிறக்க முடியும்” என்று அக்மல் தனது யூடியூப் சேனலில் கம்ரான் அக்மல் கூறி உள்ளார்.
Comments
Post a Comment