திருமணத்தில் கலந்து கொண்ட 12 ஆண்கள் 8 பெண்களுக்கு சிக்கல்..
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி திருமணத்தை நடத்திய 20 பேர்
தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பாணந்துறை வடக்கு பல்லேமுல்ல பகுதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 12 ஆண்கள் 8 பெண்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் குறித்த நபர்கள் 14 நாட்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர், பொலிஸாரால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
Comments
Post a Comment