வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு. #அட்டாளைச்சேனை

 



(ஏ.எல்.றியாஸ்)

கொரோனா அச்சுறுத்தலினால் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக, அட்டாளைச்சேனை

கோணாவத்தை பிரதேசத்தில் வருமானத்தினை இழந்து நிர்க்கதிக்குள்ளான 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகம் முன்னெடுத்துள்ளது.


மேற்படி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் முதலாம் கட்ட நிகழ்வு கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் (28) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றியாஸ், கழகத்தின் உப தலைவர் எஸ்.எல்.எம்.முஸம்மில், முகாமையாளர் ஏ.எல்.றிம்சான் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


தொழிலின்றி நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்கள் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கு இந்நிகழ்வின் போது உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


கொரோனா தாக்கத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் போதும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில், பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு அல்-நாஜா விளையாட்டுக் கழகம் உலர் உணவுப் பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !