சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான அஜ்மில் தஹ்சீன் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைவு.
சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான அஜ்மில் தஹ்சீன் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைவு.
புத்தளம் மாவட்டம் புழுதி வயலைச் சேர்ந்த அஜ்மில் தஹ்சீன் ஐக்கிய
காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
சமூக சேவையாளரும் வளர்ந்து வரும் ஊடகவியலாளரும், சமூக சிந்தனையுடன் சமூகத்தின் ஒற்றுமைக்கு பாடுபடுபவரான இவர் ஐக்கிய காங்கிரசில் இணைந்ததை தொடர்ந்து புத்தளம் - புழுதிவயல் அமைப்பாளராக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நான்கு மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் பல இளைஞர் சார் அமைப்புகளில் உறுப்பினராவார். இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக செயற்படும் ஒருவர்.
நாட்டில் உள்ள கட்சிகளில் மக்களை அரசியலின் பெயரால் ஏமாற்றாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுவதில் உறுதியுடன் வழிகாட்டும் தலைமையை கொண்டிருக்கும் ஐக்கிய காங்ரஸ் (உலமா) கட்சியின் நீண்ட கால பல நேர்மையான செயல்பாட்டினை பார்த்த பின் அக்கட்சியில் இணைந்து செயல்படுவதன் மூலமே சமூகத்துக்கு நல்ல அரசியல் பாதையை காட்ட முடியும் என்பதை உணர்ந்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment