பிரதேச சபைக்குக் கூட செல்லாத ஒருவரை, நாட்டின் அதிகாரத்துக்கு வர இடமளிக்க வேண்டாம் என்று நான் அப்பவே சொன்னேன்..
"பிரதேச சபைக்குக் கூட செல்லாத ஒருவரை, நாட்டின் அதிகாரத்துக்கு
வர இடமளிக்க
வேண்டாம்.
நாட்டின் முதற் பிரஜையாக்க வேண்டாம். அவ்வாறு ஆக்கினால் நாடு அழிவடையும் என, ஜனாதிபதித் தேர்தலின் போது முழு நாடும் கேட்பதற்குக் கூறினேன்" எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
குமார வெல்கம, "இராணுவத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கட்டளையிட முடியுமே தவிர, வேலை செய்ய முடியாது என்பதை நானே முதலில் வலியுறுத்தினேன்" என்றார்.
"நான் அவ்வாறு
கூறும் போது அதனை ஏற்றுக்கொள்ளாமல் 69 இலட்சம் பேர் வாக்களித்தனர்.
இப்போது நாடு சீரழிந்து விட்டது" என்றார்.
இப்போது, ஜனாதிபதி நகைப்புரியவராக மாறுகிறார். செய்வதற்கு ஒன்றும் இல்லை. எவ்வாறு நாட்டுக்கு டொலர் கொண்டு வருவார். எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்துவார். எவ்வாறு நிவாரணம் வழங்குவார். எரிபொருளை எவ்வாறு கொண்டு வரப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.
பிரச்சினைகளுக்க அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தவறான தீர்மானம் எடுக்க மாட்டோம்; அவர்கள் செய்த தவறை நாம் செய்யமாட்டோம் எனத் தெரிவித்து அதிகாரத்துக்கு வந்தவர்கள், மீண்டும் மைத்திரிபால சிறிசேனவின் தவறையே செய்கின்றனர்.
எனவே, இந்தப்
பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து, பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என தெரிவித்த அவர், 2010-2015 காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எடுத்த தீர்மானம் ஆட்சியை தோல்வியடையச் செய்தது. அதேபோல,
2015- 2020 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரணில்- மைத்திரி ஆட்சியும் வெற்றிகரமாக அமையவில்லை. அவர்களும் பெயில். இப்போது சேரும் பெயில். எனவே, இந்த நாட்டுக்கு ஜனாதிபதி முறையொன்று அவசியமற்றது என்றார்.

Comments
Post a Comment