விமர்சனங்களை தவிர்த்திருக்க, துமிந்த சில்வாவையும், ரஞ்சன் ராமநாயக்கவையும் ஒன்றாக விடுவித்திருக்க வேண்டும்.

 விமர்சனங்களை தவிர்த்திருக்க, துமிந்த சில்வாவையும், ரஞ்சன் ராமநாயக்கவையும் ஒன்றாக விடுவித்திருக்க வேண்டும்.

 




ஏ.பி.எம்.அஸ்ஹர்

பொசன் தினத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களில் தமிழ்

அரசியல் கைதிகளையும், சிங்கள கைதிகளையும் ஒன்றாக விடுதலை செய்துவிட்டு ஓரிரு மாதங்களின் பின்னர் துமிந்த சில்வாவையும், ரஞ்சன் ராமநாயக்கவையும் ஒன்றாக விடுவித்திருந்தால் அமெரிக்க தூதுவரும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் கூறும் விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.



அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலு‌ம் குறிப்பிடப்பட்டுள்ளதாவது



அறிவும் புத்தியும் வெவ்வேறானவை.

அபயராம விகாரையின் விகராதிபதி முருத்தேட்டுவே ஆனந்த தேரர் அவர்கள் மஹிந்த ராஜபக்சவின் உடம்பும், ரணில் விக்கிரம சிங்ஹவின் தலையும் இணைந்து செயல்பட்டால் இலங்கைக்கு நல்லது என்று கூறியுள்ளார்...



ஆனால் அவ்வாறில்லாமல்

மஹிந்தவின் இதயமும், ரணிலின் மூளையும் இணைந்து ஒருசேர செயல்பட்டால் நாட்டுக்கு நல்லது என்று தேரர் கூறியிருந்தால் புத்திசாலித்தனமாக இருந்திருக்கும்.




பொசன் தினத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களில் தமிழ் அரசியல் கைதிகளையும், சிங்கள கைதிகளையும் ஒன்றாக விடுதலை செய்துவிட்டு ஓரிரு மாதங்களின் பின்னர் துமிந்த சில்வாவையும், ரஞ்சன் ராமநாயக்கவையும் ஒன்றாக விடுவித்திருந்தால் அமெரிக்க தூதுவரும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் கூறும் விமர்சனங்களை தவிர்த்து அவர்களை இராஜதந்திர ரீதியாக தவிக்கவிட்டிருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !