ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி ஆட்சிக கு வந்தனர்.இது வரை புதிதாக எதுவும் இடம் பெறவில்லை

 


ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற

 உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்றைய(28)  ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.


ஜனாதிபதி நாட்டிற்கு உரையாற்றி தேசிய பாதுகாப்பு குறித்து ஏதோ கூறினார், ஆனால் சில விஷயங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை. தாய்நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு முக்கியமானது. இதுவரை எடுக்கப்பட்ட தீர்வுகள் குறித்து நான் திருப்தியடையவில்லை.


தான் ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தேடப்படும் என்று கூறானார். இங்குதான் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி ஆட்சிக கு வந்தனர்.இது வரை புதிதாக எதுவும் இடம் பெறவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஒரு சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் புதிய ஆட்சியில் எவரும் கைது செய்யப்படவில்லை. 



ஆட்சிக்கு வந்து பாதுகாப்புத்துறையில் சில வெற்றிடங்களை நிரப்ப முயற்சிப்பதால் இது முடிந்து விடாது.செயல்முறை சரியாக நடக்கவில்லை. இராணுவம் புலனாய்வைப் பலப்படுத்தியுள்ளது என்று இந்த அரசாங்கம் கூறுகிறது. இது ஒரு பொய். இது குறித்து எங்களுக்கு அறிவுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் சரியாக செயல்படவில்லை,இந்த  அரசாங்கத்திலும் அவ்வாறே.இது ஒரு சிறிய நாடு,எமது உயிரைப் பனயம் வைத்து நாட்டைப் பாதுகாத்தோம்.இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியும் வெளிநாட்டவர்களுக்கு விற்க்கப்படுகிறது.தலைநகரிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.இது துறைமுக நகரத்திலிருந்து  தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. செலாண்டிவாவுக்கு ஏற்றால் போல் செயற்படுகிறது. 


நமது தாய்நாட்டில் வருங்கால சந்ததியினருக்கு இதில் அச்சுறுத்தல் உள்ளது.இங்கு குறுகிய காலத்தில் சமுத்திரப் பாதுகாப்பும் பலமிழந்துள்ளது. வெளிநாட்டு கப்பல்கள் தீப்பிடிக்கின்றன என்பது ஒரு பரிதாபம். மறுபுறம், இரண்டு கப்பல்கள் எமது கடல் எல்லைக்குள் குறுகிய காலத்தில் தீ பிடித்தன. இது தொடர்பாக எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கம் அளித்த பதில்களை எங்களால் ஏற்க முடியாது. நமது கடல் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நமது கடல் உயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 


கடல் வாழ் உயிர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.தீயினால் மீனவ சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இழப்பீடு என்பது பற்றி அரசாங்கம் பேசவில்லை. மீன்பிடி சமூகத்திற்கு ஒரு நிவாரணம் உள்ளது. நாட்டையும்  சமுத்திர பரப்பையும் பாதுகாக்க நீங்கள் செயற்ப்படாவிட்டால் அது ஆபத்தாகும்.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்ததை நாங்கள் கண்டோம். அதற்கு பொறுப்பான அதிகாரிகளை நாங்கள் கண்டோம். இவற்றுக்கு பெறுப்பான அதிகாரிகள் ஏற்காவிட்டால் அரசாங்கம் பெறுப்பெடுக்க வேண்டும்.காலப்போக்கில், அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லா நிலை ஏற்ப்படும்.


கிராமத்திற்குச் செல்லும் வீதி  முறையாக காபட் செய்யப்படாததாகக் கூறி ரிதீமாலியத்த கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் போராட்டம் நடத்தியதை ஊடகங்களில் கண்டோம்,அவ்விடத்திற்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக பிரதேச சபைத் தலைவரின் குண்டர்களுடன் வந்து மக்களைத் தாக்கியதாகவும் ஒரு செய்தியைக் கண்டோம். கராட்டி வடிவிலான தாக்குதல் நடவடிக்கைகளை கண்டோம்.இது போன்ற பல செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

தற்போதைய அரசாங்கத்தால் தாக்கப்படுவது குண்டர்கள்தான் என்று காணப்படுகிறது.


பாதாள உலகம் முடிந்துவிட்டது என்று ஜனாதிபதி கூறினார், ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஹன்வெல்லவிலிருந்து ஒரு நபர் கடத்தப்பட்டு, கைவிலங்கு இடப்பட்டு, சுட்டு,களனி ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டதை நாங்கள் கண்டோம்.இப்போது பாதாள நடவடிக்கை முடிந்து விட்டதா?


இன்று சி.ஐ.டியைக் கொண்ட ஒரு பாதாள உலகமாக மாறியுள்ளது ஆட்சி மாறியுள்ளது. அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எமது ஆட்சியில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று நாங்கள் நினைக்கிறோம். நாம் கடந்த காலங்கில் அசிங்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட  மக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்திலும் இவ்வாறு  நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.


சமீபத்தில் நாங்கள் கைதிகளின் விடுதலையைப் பார்த்தோம்.துமிந்த சில்வாவின் விடுதலையில் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை.ஒரு கேள்வி என்னவென்றால், இந்த அரசாங்கம் நீதியை நிர்வகிக்கும் பணியில் சரியானதா என்பதுதான். மைத்ரிபால சிறிசேன ஒரு கொடூரமான கொலைகாரனை மன்னித்து விடுதலை வழங்கினார். அவருக்கு இலஞ்சம் கொடுத்ததாக செய்திகள் வந்துள்ளன. துமிந்த சில்வாவன் விடுதலை சிறைச்சாலையின் முடிவா  அல்லது அமைச்சரின் முடிவா எனலபது  எங்களுக்குத் தெரியாது.அது எனக்கு 

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !