மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகளை முன்வைக்க முடியாவிட்டால் அது பதவி விலகவேண்டும் – சஜித்
மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகளை முன்வைக்க முடியாவிட்டால் அது பதவி விலகவேண்டும் – சஜித்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நாட்டிற்கான உரை அரசாங்கத்தின் இயலாமையையும் தோல்வியையும் வெளிப்படுத்தியுள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரைக்கு முன்னாள் நான் எழுப்பிய ஆறு கேள்விகளிற்கான பதில்களை ஜனாதிபதி வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் எரிபொருள் விலை அதிகரிப்பு பொதுமக்களிற்கு நிவாரணம் உட்பட ஆறு யோசனைகளை முன்வைத்தேன் ஜனாதிபதி அவற்றிற்கு பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் தீர்வுகளை முன்வைக்க முடியாவிட்டால் அது பதவி விலகி மாற்று அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் அதிகாரத்தை பொறுப்பேற்று மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வை வழங்கி நாட்டை ஆட்சி செய்ய தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment