தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை விற்பவர்களுக்கு எதிராக கடும் தண்டனை..



தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்றுவதற்கு 

நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அணியப்படும் முகக்கவசத்திற்கு தரச்சான்றிதழ் கட்டாயமாகும் என அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.



இதனடிப்படையில், தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளில் விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறான முகக்கவசங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !