வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வாகனத்தையும் தீ வைத்த கும்பல்.

 




முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் தீவைத்துவிட்டு சென்றுள்ளார்கள்.



இதன் போது வாகனம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன் ஒரு வாகனம் சேதமடைந்துள்ளது.



வீட்டில் இருந்த ஒருவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.


- நிருபர் தவசீலன்-

Derana

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !