இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும், அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு.
இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும், அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு.
(இராஜதுரை ஹஷான்)
இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும்,
அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்றே கருத வேண்டும்.
பஷில் ராஜபக்ஷ நாட்டுக்கு சேவையாற்ற நினைத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போன்று அமெரிக்க குடியுரிமையை துறக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றே தோன்றுகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரச நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்குப்பற்றுவதும் தவறானதாகும்.
இரட்டை குடியுரிமையினையுடைவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிராக செயற்பாடாகும்.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகி நாட்டுக்கு சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது.
ஆனால் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு இரட்டை குடியுரிமையினை உடையவருக்கு அரசியலில் அனுமதியளிக்க முடியாது.
மேலும், இரசாயன உரம் தடை செய்யப்பட்டமையினால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்குட் பட்டுள்ளர்கள்.
சேதன உர பாவனை வரவேற்கத்தக்கது. அதற்கு சிறந்த திட்டம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரசாயன உரம் பாவனைக்கு பழகியிருந்த விவசாயிகளை சேதன பசளை பாவனைக்கு விரைவில் பழக்கப்படுத்த முடியாது.
எவ்வித திட்டமிடலுமின்றிய வகையில் இரசாயன உரம் தடை செய்யப்பட்டமையினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் பெரும் விளைவினை நாட்டு மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் எதிர்க்கொள்ள நேரிடும்.
இரசாயன உரம் பாவனை தடை மற்றும் சேதன பசளை பாவனை இவ்விடயத்தில் அரச தலைவர்கள் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் உரிய தரப்பினரின் ஆலோசனைகளை பெறவில்லை என்றே குறிப்பிட முடியும்.
அரசியல்வாதிகள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் நடைமுறையில் சாதகமாக அமையாது. ஆகவே சிறுபோகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு இம்முறை மாத்திரம் அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார்.
Comments
Post a Comment