அடுத்த வாரமும் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும்

 அடுத்த வாரமும் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும்

 




மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட

 பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


இதற்கமைவாக அடுத்த வாரம் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.


தற்போதைய கொவிட் 19 வைரஸ் தொற்று அனர்த நிலை இன்னும் குறைவடையவில்லை என்று இராணுவத்தளபதி எமக்கு அறிவித்துள்ளார்.


கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானம் மாகாணங்களுக்கிடையில் பஸ் அல்லது ரயில் சேவைகள் இடம்பெறக்கூடாது என்பதாகும்.



இந்த தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021