விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது
விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை
சகித்துக்கொள்ள முடியாது என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
“நம் நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுதுவதற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பையும் நேரத்தையும் முதலீடு செய்யலாம்.
இருப்பினும், நாட்டிற்காக ஒரு நோக்கத்திற்காக விளையாடாது மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது.
இந்த வரம்புகளை மீறும் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரிக்கெட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment