எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் - இராணுவ தளபதி

 எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் - இராணுவ தளபதி

 



நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என

 இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.


எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.


இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார்.


சுமார் ஒரு மாத காலம் நாடு தழுவிய ரீதியில் அமுலிருந்து பயணத்தடை நேற்று அதிகாலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021