இங்கிலாந்தில் இரவில் சுற்றிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குஸல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்து டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் ஒரு வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (எஸ்.எல்.சி),
இலங்கை அணி முகாமையாளரிடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது.
VIDEO :
https://m.facebook.com/story.php?story_fbid=1016056594
தற்போது கொரோனா அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளின் ஒரு பகுதியாக இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் Bio Bubble பாதுகாப்பு முறையின் கீழ் அங்கு உள்ளது,
மேலும் நாளை (29) டர்ஹாமில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து டி 20 போட்டிகளிலும் தோல்வியுற்றிருக்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் இந்த நடத்தை சமூக வலைகளில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கபட்டு வருகிறது.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட்டின் (SLC ) மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் வீரர்கள் Bio Bubble உயிர் குமிழி மற்றும் ஹோட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியிருக்கிறார்களா என்பது கண்டறியப்படும் என்றும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னரே, கிரிக்கெட் வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment