சவுதி, கட்டார், UAE உட்பட 6 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவது தற்காலிக தடை.
6 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு
வருவதை தடை செய்ய COVID-19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் (NOCPCO) முடிவு செய்துள்ளது.
அதன்படி, கட்டார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்டிருந்த பிரஜைகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் .
இதற்கான பணிப்புரை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு முதல் ஜூலை 13 ஆம் தேதி நள்ளிரவுவரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடை செய்வதற்கான தீர்மானம் இன்று காலை எடுக்கப்பட்டது.
இருப்பினும், மேலதிக ஆராய்வுக்காக இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் அதன்பின்னர் தெரிவித்தனர்.
இந்த திட்டத்திற்கு இன்றுமாலை COVID-19 தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையம் (NOCPCO) அனுமதி அளித்துள்ளது.
Comments
Post a Comment