(நாளை ) 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தளர்த்தப்பட வாய்ப்பு.
(நாளை ) 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தளர்த்தப்பட வாய்ப்பு.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கு
இடையில் அமுல்படுத்தப்பட்டு பயணத்தடை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் அமுலாகும் வகையில் கடந்த மே மாதம் 11ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் மே மாதம் 30ஆம் திகதி வரை இந்த பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பயணத்தடை தளர்த்தப்படுகின்றமை குறித்து இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Siva Ramasamy
Comments
Post a Comment