போதைப்பொருள் வியாபாரம் செய்து 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் செய்த பெண் கைது.

 போதைப்பொருள் வியாபாரம் செய்து 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் செய்த பெண் கைது.

 


5 வங்கி கணக்குகள் ஊடாக போதைப்பொருள் வியாபாரத்தை

 மேற்கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெஹிவலை பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 4 ஆண்டுகளாக குறித்த கணக்குகளில் 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



இலங்கை மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021