எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

 எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

 


ஏ.பி.எம்.அஸ்ஹர்

எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பதை 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார் 



அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது




றிசாட் பதியூதீனை முடிக்கப்போகிறார்கள்

சகோதரர் றிசாட் பதியூதீனை அழித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு முசரப் எம்.பியை தலைவராக்கும் சதித்திட்டம் அரங்கேறுவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவராகிறாரா முசாரப் என்ற தலைப்பிட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி எனது முகநூலில் எழுதியிருந்தேன்.




ஆனால், அதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியினர் நையாண்டி பண்ணினர்.



முசரப் எம்.பியை பத்தர மாற்று தங்கம் என அடித்துச் சொன்னார்  யாரோ ஒருவர். றிசாட் பதியூதீனோடு தடுப்புக்காவலிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது  றிசாட் பதியூதீனோடு முசரப் எம்.பி நடந்துவரும் போட்டோ ஒன்றை பதிவேற்றி தலைவரோடு  முசரப் எம்.பி கடும் நெருக்கம் என்பதாக பதிவேற்றியிருந்தார்.



பாவம் இவர்கள் இப்படி அப்புறாணிகளாக இருக்கிறார்களே என அன்று மனசு சொன்னது.



இன்று நிஜத்தில் ஒவ்வொன்றாக அரங்கேறுகிறது.



 அதிகாரத்திலுள்ளோர் றிசாட் பதியூதீனை முடிப்பது என்ற முடிவோட களமிறங்கிவிட்டதாக படுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக. 

இப்போது 

இலங்கை மக்கள் காங்கிரஸில் இருக்கும் ஒரே ஒரு எம்.பி முசரப் மாத்திரமே.



அவர் மூச்சு பேச்சில்லாமல் அடங்கிவிட்டார். அதன் அர்த்தம் என்ன

அறிவுடையோருக்கு இதில் அத்தாட்சியுண்டு..


றிசாட் பதியூதீனை அழித்த பின்னர் அடுத்து கைவைக்க முனையப்போவது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சகோ. றஊப் ஹக்கீம் மீதுதான். இதற்கு 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலுள்ள 20க்கு கையுயர்த்திய எம்.பிக்களில் இருவர் உடந்தையாக இருப்பார்கள். 


அதற்கான நிகழ்ச்சி நிரலும் ஏலவே தயாராக இருந்தது. இதனை தலைவர் றஊப் ஹக்கீம் மிகத்தெளிவாக புரிந்திருந்தார். அதனால், அவர்கள் பெருமெடுப்பில் தன் மீதும், கட்சி மீதும் பாய்வதற்கான இடைவெளியை மூடினார். 


கட்சித் தலைமையின் எதிர்ப்பினை கவனத்தில் கொள்ளாமல் - 20க்கு கையுயர்த்த எம்.பிக்கள் தயாராவதாக இருந்தால்  இதன் பின்னணி என்ன இதன் சூத்திரதாரி யார் ஆபத்தை புரிந்துகொண்டார்.


20க்கு கையுயர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால்  கட்சிக்குள்ளேயே தனக்கெதிரான பலமான எதிர்ப்பும் விமர்சனமும் இருந்தும்  20க்கு கையுயர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தினார். மக்கள் 20க்கு கையுயர்த்தியவர்களின் துரோகத்தனத்தை விளங்கிக்கொள்ள இடைவெளி விட்டு  தந்திரோபாய பின்னகர்வினை செய்தார்.

அல்லது, முதலில் றஊப் ஹக்கீமே முடிக்கப்பட்டிருப்பார். றிசாட் பதீயூதீன் பின்னர்தான். இருந்தாலும், இன்னும் 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும் Safe Zoneக்குள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பாயலாம். அதற்கு முழு அளவில் களமிறங்கி ஆதரவு செய்ய  குறித்த இரண்டு 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்   

எம்.பிக்களும் இன்றும் On your markயில்தான் இருக்கிறார்கள்.

எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !