சமூக வலைகளில் வீடியோ வெளியான அவமானத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி.

 சமூக வலைகளில் வீடியோ வெளியான அவமானத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி.

 


யாழ்ப்பாணத்தில் அவமானம் தாங்க முடியாமல் இளைஞன்

ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


புறா வளர்ப்பில் இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இளைஞர் ஒருவரை பெண்கள் பிடித்து தாக்கி, முகத்தில் மிளகாய்த்தூள் வீசியுள்ளனர்.


அத்துடன், குறித்த சம்பவத்தை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அவமானத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.


இதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு பிசிஆர் பரிசோதனை செய்தபோது கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த இளைஞரின் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக யாழ்.போதனா வைத்திசாலையின் ஆய்வுகூடத்திற்கு கையளிக்கப்பட்டப்பட்ட நிலையில் குறித்த இளைஞருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் தற்கொலை தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Siva Ramasamy

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !