சடலத்தை கண்டுபிடிக்க உதவுமாறு- பொலிசார் கோரிக்கை!

 சடலத்தை கண்டுபிடிக்க  உதவுமாறு-  பொலிசார் கோரிக்கை!




(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை கண்டுபிடிக்க உதவுமாறு திருகோணமலை- உப்புவெளி பொலிஸார் பொதுமக்களிம் கோரியுள்ளனர்.


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுர சாந்தியில் கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி கார் ஒன்றுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில் குறித்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் அவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ஆனாலும் இவர் குறித்து எதுவித தகவல்களும் கிடைக்காத பட்சத்தில் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கோ 0262222522  அல்லது

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி 

077 256 4808 ஆகியோருக்கு தெரியப்படுத்துமாறு உப்புவெளி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !