பெண்ணொருவருக்கு இரு கைகளிலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய தாதிமார்.
பெண்ணொருவருக்கு இரு கைகளிலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய தாதிமார்.
பெண்ணொருவருக்கு இரு கைகளிலும் இரண்டு கொரோனா
தடுப்பூசிகளை செலுத்திய மற்றுமொரு சம்பவம் பதிவாகி உள்ளது.
யாழிழ் பெண்ணொருவருக்கு
இரு கைகளிலும் கொரோன தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள
சம்பவமொன்று நேற்று (29)
இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில்
30 வயதுக்கு மேற்பட்ட
அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும்
வேலைத்திட்டம் நேற்று (29) முதல் முன்னெடுக்கப் பட்டது.
இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில்
அமைந்துள்ள கொரோனா
தடுப்பூசி வழங்கும் மையத்தில் கொழும்புத்துறை ஜே/61 பிரிவைச்
சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி
ப�ோடப்பட்டது.
இதே பிரிவைச் சேர்ந்த 66
வயதான பெண்ணுக்கு இரு
கையிலும் தடுப்பூசிகள்,
ஏற்றப்பட்டுள்ளன என
தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் ஒரு கையில்
தாதியொருவர் ஊசியைச்
செலுத்தி விட்டு அங்கிருந்து
உடனடியாகச் சென்றுவிட்டார்.
தடுப்பூசியை செலுத்திக்கொண்ட
பெண் அவ்விடத்திலேயே
அமர்ந்திருந்துள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்குத்தான் அப்பெண் அமர்ந்திருக்கின்றார்
என நினைத்த மற்றுமொரு தாதி, மற்றைய கையைக் காட்டுமாறு கூறி
ஊசியைச் செலுத்தியுள்ளார்.
எனினும், இத்தவறு
உடனடியாக கண்டறியப்பட்டது.
தவறுதலாக இடம்பெற்று
விட்டதாக அங்கிருந்த
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், ஏதாவது உடல்
உபாதை ஏற்பட்டால்
உடனடியாக அறிவிக்குமாறு
கூறி,அந்நிலையத்திலிருந்து
வயயோதிப பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.
Comments
Post a Comment