உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கொத்தணி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது 💎
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கொத்தணி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது 💎
உலகில் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கொத்தணியொன்று
இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.
இது ஏறக்குறைய 510 கிலோகிராம் நிறையுடையது என்றும், இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் சுமார் 20 பில்லியன் ரூபா) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு பின்புறமாக கிணறு தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த நீல மாணிக்கக்கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த மாணிக்கக்கல் Serendib Sapphire வகை என கண்டறியப்பட்டுள்ளது.
Comments
Post a Comment