ஹெரோயினுடன் அனுராதபுர நபர் ஓட்டமாவடியில் கைது
ஹெரோயினுடன் அனுராதபுர நபர் ஓட்டமாவடியில் கைது
அனுராதபுரத்தைச்சேர்ந்த 41 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரியொருவர் ஓட்டமாவடி, SMT ஹாஜியார் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்றிரவு (2021-07-27) 08.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 4 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியில் திருமணம் முடித்து வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் தொடர்பிலும் இவருடன் தொடர்பினைப் பேணியவர்கள், போதைப்பொருள் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்டநடவடிக்கைக்காக நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment