கறுவாக்கேணியில் பிரபல போதை மாத்திரை வியாபாரியும் இளைஞனும் கைது

 கறுவாக்கேணியில் பிரபல போதை மாத்திரை வியாபாரியும் இளைஞனும் கைது 



வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கறுவாக்கேணி வீதியில் வைத்து 38 வயதுடைய பிரபல போதை மாத்திரை வியாபாரியும் 27 வயதுடைய இளைஞரொருவனும் இன்று 2021-07-30ம் திகதி வெள்ளிக்கிழமை 01.30  மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களிடமிருந்து விற்பனைக்கு தயார் நிலையில் 50 பெட்டிகளில் 1,500 போதை மாத்திரைகள் அடங்கிய போதை மாத்திரைகள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முதற்கட்ட விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !