இலங்கை கடனாக பெற்று இருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டது.
இலங்கை கடனாக பெற்று இருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டது.
சர்வதேச அபிவிருத்தி முறிகள் ஊடாக இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மீள செலுத்தியுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்திய பின்னர் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியன் டொலராக வீழ்ச்சியடையக் கூடும்.
எனினும், அது ஸ்தீரமற்ற தன்மையை பிரதிபலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி இருப்பு நிலை அல்ல பணப்புழக்கமே முக்கியம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த நிதி மேலாளர்கள் இருப்பு தற்காலிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதை அறிவார்கள்.
எனினும், எதிர்கட்சி குழுக்கள் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக காட்ட முனைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment