ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.
ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.
ஐக்கிய தேசிய கட்சியை
ஆட்சிப்பீடமேற்றுவதற்கான வேலைத்
திட்டங்களை, அக்கட்சியின் 75ஆவது
ஆண்டு விழாவின்போது தான் அறிவிக்க
உள்ளதாக அக்கட்சியின் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான ரணில்
விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் இளைஞர்
செயற்பாட்டாளர்களுடன் இணைய வழியிலான கலந்துரையாடலின்போது,
பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து அங்கு
உரையாற்றிய அவர், ஐ.தே.கவின்
75ஆவது ஆண்டு விழா செப்டெம்பர்
06ஆம் திகதி நடைபெற உள்ளதோடு,
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜமெனவும் தெரிவித்துள்ள ரணில்,
1956ஆம் ஆண்டு ஐ.தே.கவுக்கு
வெறும் 8 ஆசனங்களே கிடைத்திருந்த
நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திலிருக்கும எவருக்கும், நாடு தற்போது
முகங்கொடுத்திருக்கும் நிலையிலிருந்து
நாட்டை மீட்க முடியாதெனவும்,
கட்சியை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டங்களை
அனைவருக்கும் அறிவிக்க
உள்ளதாகவும் தெரிவித்தார
Comments
Post a Comment