ஹரீன் பெர்ணான்டோவுக்கு சீ.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு.
ஹரீன் பெர்ணான்டோவுக்கு சீ.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
ஹரீன் பெர்ணான்டோவுக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 10 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகி இருக்குமாறு அதன் வலய பொறுப்பதிகாரி ஹரீன் பெர்ணான்டோவுக்கு அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment