ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட இந்து விவகார இணைப்பாளராக கந்தசாமி விநாயகமூர்த்தி நியமனம்.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட இந்து விவகார இணைப்பாளராக கந்தசாமி விநாயகமூர்த்தி நியமனம்.
மன்னார் உப்புக்குளம் வட்டாரத்தை சேர்ந்த கந்தசாமி விநாயகமூர்த்தி அவர்கள் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட இந்து விவகார இணைப்பாளராக கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பல இந்துமத சேவை மன்றங்களின் அங்கத்தவராகவும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒருவருமாவார்.
முன்னர் பல அரசியல் கட்சிகளில் இணைந்து செயற்பட்ட போதும் தனக்குரிய இடம் சரியாக தரப்படவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.
ஆனாலும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் இவரை மன்னார் மாவட்ட இந்து மத விவகார இணைப்பாளராக நியமித்தமை தனக்கு கிடைத்த முகப்பெரிய கௌரவமாக கருதுகிறார்.
இனமத பேதம் இன்றி, நாட்டில் உண்மையான இன ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் ஏற்படுத்த அரசியல் ரீதியில் பாடுபடும் ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதின் தூய்மையான அரசியல் கோட்பாட்டில் கவரப்பட்டதால் இதனுடன் இணைந்து மன்னார் மாவட்ட மக்களின் இந்து மத விவகாரங்களை சிறப்புறச்செய்து அதன் மூலம் நாட்டு மக்களின் அனைத்து மத மக்களுக்கும் பாலமாக தான் செயற்பட போவதாக இவர் தெரிவிக்கிறார்.
Comments
Post a Comment