பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி... எமது போராட்டம் தொடரும்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி... எமது போராட்டம் தொடரும்.
அதிபர்-ஆசிரியர்களின் சம்பள விடயம் தொடர்பில்
இன்று (27) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் தற்பொழுது இணைய கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
எவ்வாறாயினும், இணையம் மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment