சதொசவில் சீனி 120 ரூபாய்க்கு விற்பனை : கொரோனாவையும், முடக்கத்தையும் மறந்து மக்கள் படையெடுப்பு.

 சதொசவில் சீனி 120 ரூபாய்க்கு விற்பனை : கொரோனாவையும், முடக்கத்தையும் மறந்து மக்கள் படையெடுப்பு.

 


மாளிகைக்காடு நிருபர்

நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு


அத்தியவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் கல்முனை லங்கா சதொசவில் இன்று சீனி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


இலங்கை உற்பத்தி பால்மா உட்பட சிலவகை பால்மா விற்பனையும் இடம் பெற்றதால் மக்கள் வெள்ளம் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.



அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்நிலைகள் உள்ளதாக கல்முனை லங்கா சதொச முகாமையாளர் தெரிவித்தார்.




நாட்டின் நடுத்தர வர்க்கம் முதல் உயர்தர வர்க்கம் வரை கொரோனா அலையில் பொருளாதார பாதிப்பை சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில் விலையேற்றம் பாரிய சங்கடத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் பலதும் பசியுடன் நாட்களை கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம், உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி அத்தியவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

நண்பர்களுடன் பகிரவும்:


Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !