நாளை முதல் ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்யலாம் - ஜானக வக்கும்புர..!

 நாளை முதல் ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்யலாம் - ஜானக வக்கும்புர..!



சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.


இந்தவிடயம் குறித்து எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


லங்கா சீனி நிறுவனத்தின் ஊடாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக சீனியை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தற்போது சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் சீனியை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது